கணம்தோறும் பிறக்கிறேன் 

Monday, September 30, 2019

ஆனை ஆனை, அழகர் ஆனை!

ஆனை ஆனை, அழகர் ஆனை!


சில நாட்களுக்கு முன்பு சன் டி.வி.யின் 'வணக்கம் தமிழா' நிகழ்ச்சியில் வனத்துறை அதிகாரியாக  அதிலும் யானைகள் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்ற திரு.சிவ கணேசன் கலந்து கொண்டார். அவர் யானைகளைப் பற்றி தெரிவித்த விஷயங்களை இங்கே உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

மனிதர்களிடம் இருக்கும் சில பழக்கங்கள் யானைகளிடமும்  உண்டாம். குட்டியை ஈன்ற தாய் யானை அதை பராமரிக்காதாம். அதன் அத்தைகளும் மூத்த சகோதர, சகோதரிகளும்தான் பராமரிக்குமாம். அதாவது நம்முடைய பழைய கூட்டு குடும்ப மரபு.

கூட்டத்தில் ஒரு யானை இறந்து விட்டால் அதன் உடல் டீகம்போஸ் ஆக இரண்டு அல்லது மூன்று மாதங்களாகுமாம். அப்படி இறந்து போன யானையின் எலும்புகளை அதன் குடும்பத்தை சேர்ந்த யானை எடுத்து அருகிலிருக்கும் நீர் நிலையில் போட்டு விட்டு, கண்ணீர் விட்டு அஞ்சலி செலுத்துமாம்.

தங்கள் குடும்பத்தை விட்டு பிரிந்த யானையை இருபது வருடங்களுக்குப் பிறகும் அதன் லத்தியை பரிசோதித்து, தன்னுடைய குடும்பமா இல்லையா என்று கண்டறிந்து தங்கள் குடும்பமாக இருந்தால் மீண்டும் சேர்த்துக் கொள்ளுமாம்.

குடும்பத் தலைமையை வகிப்பது பெண் யானைதான். அந்த குடும்பத்தின் மூத்த பெண் யானைதான் அந்த பொறுப்பை வகிக்கும். ஒரே வயதில் நான்கு பெண் யானைகள் இருந்தாலும் எல்லாம் தலைமைக்கு வந்து விட முடியாதாம்.  தலைமை பொறுப்பை ஏற்றிருக்கும் அந்த மூத்த பெண் யானை தான் உயிருடன் இருக்கும் பொழுதே தனக்கு பிறகு யார் அந்த இடத்திற்கு வர வேண்டும் என்பதை தீர்மானித்து  அந்த குட்டி யானைக்கு இளம் வயதிலேயே அதற்கான பயிற்சிகளை கொடுத்து தயார் செய்து விடுமாம்.

யானைக்கு பார்வைத்திறன் குறைவுதானாம். ஆனால் மோப்ப சக்தி மிக அதிகமாம். யானையை பழக்க நினைக்கும் பாகன் தன் உடல் வாசனை அதற்கு பழக வேண்டும் என்பதற்காக மூன்று மாதங்கள் வரை கூட குளிக்காமல் இருப்பதுண்டாம். இந்தியாவிலேயே யானைகளை பழக்குவதில் தமிழகத்திற்குதான் முதலிடம் என்றார்.

கோவில்களில் பெண் யானைகளைத்தான் வைத்துக் கொள்வார்களாம். அவைகளுக்கு என்ன உணவு கொடுக்க வேண்டும் என்று நியதி இருக்கிறதாம். ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த பொழுது கோவில் யானைகள் வருடத்தில் ஒரு மாதம் முதுமலைக்கு ரிட்ரீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும் என்ற திட்டத்தை கொண்டு வந்தது ஒரு நல்ல விஷயம் என்றார்.

ஒருமுறை சூலுற்ற ஒரு யானை அவரையும் அவரது உதவியாளரையும் துரத்தியதாம், அவரது உதவியாளர்,"உங்களால் வேகமாக மரம் ஏற முடியாது, நான் வேகமாக மரத்தில் ஏறி விடுவேன், எனவே, நான் மரத்தில் ஏறி விடுகிறேன், நீங்கள் பாலத்தின் அடியில் இருக்கும் கல்வெட்டுக்கு பின்னால் ஒளிந்து கொள்ளுங்கள்" என்று கூறி விட்டு, மரத்தின் மீது ஏறிக்கொண்டு விட்டாராம். அதோடு மட்டுமல்ல,"சார், கல் வெட்டுக்கு பின்னல் ஒளிந்து கொள்ளும் முன் அங்கு கரடி எதுவும் இல்லையே என்று உறுதி படுத்திக்கொள்ளுங்கள்" என்றாராம், நல்ல உதவியாளர்! இது போல் பல சுவாரஸ்யமான நிகழ்வுகள்(!!??) என்றார். சரிதான்!




33 comments:

  1. "ஆனை, ஆனை, அழகர் ஆனை" என்போம். ஆனை குறித்த இத்தனை விஷயங்களையும் முன்னரும் படித்திருக்கிறேன். தன் கூட்டத்தில் ஒரு ஆனை இறந்தாலும் மற்றவை எல்லாம் கண்ணீர் அஞ்சலி செலுத்துவதையும் வளர்த்த மனிதர்கள் இறந்தாலும் தேடிப் பிடித்துப் போய் அஞ்சலி செலுத்துவதையும் கூடச் சொல்லி இருக்கின்றனர். தொலைக்காட்சிகளில் பார்க்கவும் பார்த்திருக்கிறேன். ஆனை குறித்த அரிய தகவல்களுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) மீதான் 1ஸ்ட்டு என வந்தால்... இங்கு எல்லோரும் வந்திட்டினம்:))

      Delete
  2. நாங்கள் அரசர் ஆனை என்றுதான் கூறுவோம். இருந்தாலும், அழகர் ஆனை என்பது இன்னும் அழகாக இருப்பதால் மாற்றி விட்டேன். எல்லா விஷயங்களையும் முன்பே படித்திருந்தாலும், என்னை உற்சாகப்படுத்துவதற்காக அரிய தகவல்கள் என்று கூறிய உங்கள் பெருந்தன்மைக்கு நன்றி.  

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி பானுமதி, பெயரை என் பொருட்டு மாற்றியதற்கு. குழந்தைப்பாடல்கள் பற்றிய பதிவில் கூடப் போட்டிருப்பேன் "ஆனை, ஆனை அழகர் ஆனை!" என்னும் பாடலை. அப்படிச் சொல்லியே பழகி விட்டது. அழகரும், அரங்கனும் அந்த அளவுக்கு மனம் கவர்ந்தவர்கள்.

      Delete
  3. தலைப்பு, சின்ன வயசில் எங்க மாமா, சின்னப் பசங்களை கால்ல வச்சிக்கிட்டு பாடற பாட்டை நினைவுபடுத்திவிட்டது.

    //அருகிலிருக்கும் நீர் நிலையில் போட்டு விட்டு, கண்ணீர் விட்டு அஞ்சலி// - அப்படி இல்லையே. யானைக் கூட்டம் வந்து அந்த எலும்புகளை (அனேகமா மண்டை எலும்பு மட்டும்தான் இருக்கும்) துதிக்கையால் தடவிக் கொடுத்து சில விநாடிகள் நின்றுவிட்டு பிறகு சென்றுவிடும். இது ரொம்ப நெகிழ்ச்சியாக இருக்கும்.

    /இந்தியாவிலேயே யானைகளை பழக்குவதில் தமிழகத்திற்குதான் முதலிடம் என்றார்.// - இதுவுமே டவுட்டுதான். கேரளாதான் முதலிடம். யானை மொழியிலேயே மலையாள வார்த்தைகள் போல் உண்டு (பாகன்கள் உபயோகப்படுத்துவது.. நீங்க பார்த்திருப்பீங்களே.கோவில் பாகன்கள் பெரும்பாலும் மலையாளிகள் என்று)

    ReplyDelete
    Replies
    1. தொலைகாட்சியில் பார்த்ததைத்தான் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.
      வருகைக்கு நன்றி.

      Delete
  4. அரிய ஆச்சர்யமான தகவல்கள் மேடம்.
    மனிதர் இறப்புக்கு காட்டிலிருந்து தேடி வீடு வந்த யானைக்கூட்டமும் உண்டு.

    ReplyDelete
  5. இதெல்லாம் தெரியாத தகவல்கள். இதையெல்லாம் அறியும் போது பிர்மாண்ட அந்த ஜீவனை ஏன் நமக்கான தேவைகளுக்காகப் பழக்கப்படுத்தி அவற்றின் சுதந்திரத்தைப் பறிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. பேசாமல் காடுகளிலேயே தம் இஷ்டப்படி அவை வாழலாம். என்ன சொல்கிறீர்கள்?..

    ReplyDelete
  6. ஒட்டகங்களைப் பார்க்கும் பொழுதும் ஒரு பரிதாப உணர்வு என் மனசில் பீறீடும். அவை, அவை வாழப் பழக்கப்பட்ட இடங்களிலேயே இருந்திருக்கக் கூடாதா என்று தோன்றும்.

    ReplyDelete
    Replies
    1. ஏன் சார் யானை, ஒட்டகம் மட்டும்தானா ? அனைத்து ஜீவராசிகளும் சுதந்திரமாக வாழவே படைக்கப்பட்டன...

      மனிதன் தனது ஆசைக்காக பறவைகளை கூண்டில் அடைத்து வளர்ப்பது மட்டும் நியாயமா ?

      பறவைகளை கூண்டில் அடைக்கும் மனிதன் ஒருநாள் வீட்டுக்குள் தன்னைத்தானே சிறை வைத்து பார்க்கட்டும் அப்பொழுது தெரியும் மற்ற உயிரினங்களின் வலி.

      Delete
    2. நாய், பூனையை விட்டுட்டீங்களே கில்லர்ஜி... அது மட்டும் நியாயமா?

      Delete
    3. உங்கள் ஆதங்கம் நியாயமானது ஜீ.வி.சார். கருத்துக்கு நன்றி.

      Delete
    4. @கில்லர்ஜி: //ஏன் சார் யானை, ஒட்டகம் மட்டும்தானா ? அனைத்து ஜீவராசிகளும் சுதந்திரமாக வாழவே படைக்கப்பட்டன..// மனிதன் எல்லாமே தனக்காக படைக்கப்பட்டவை என்று நினைக்கிறான்.

      Delete
    5. //நாய், பூனையை விட்டுட்டீங்களே// பூனையைப் பற்றி தெரியாது. மனிதர்களோடு நட்பாக பழக ஆரம்பித்த முதல் மிருகம் நாய் என்று படித்திருக்கிறேன்.

      Delete
    6. பாவம் ஒட்டகம். மிகவும் சாதுவான பிராணி. மாங்கு மாங்கென்று ஊர்பட்ட சுமையை சுமந்து வருவதை நினைத்தாலே பரிதாபமாக இருக்கிறது.

      ராஜஸ்தான், தில்லி போன்ற இடங்களுக்குப் போயிருந்த பொழுது சகஜமாகப் பார்த்திருக்கிறேன். தென்னகத்திற்கு அவ்வளவாக பழக்கப்படாத ஜீவன். முன்பெல்லாம் மதுரை மீனாட்சி அம்மான் கோயில் திருவிழாக்களில் காணப்படும். கண்களில் நீர்தாரையுடன் சின்ன வயசில் அவற்றைப் பார்த்த நினைவுகள் இன்னும் மனசில் படிந்திருக்கின்றன.

      அந்த பாலைவனக் கப்பல் பற்றி சிறுவயதில் பாடப்புத்தகங்களில் படித்த தகவல்கள் உருக்கமானவை. அந்த நினைவுகள் வந்து ஒட்டகம் பற்றி ஸ்பெஷலாகக் குறிப்பிட்டேன், தேவகோட்டையாரே!


      Delete
  7. ஆஆஆஆஆஆ ஆனைக் கதை சுவாரஷ்யம்.. இன்னும் சொல்லுங்கோ பானுமதி அக்கா..

    ReplyDelete
    Replies
    1. எதுவும் சொந்த சரக்கில்லை அதிரா. நன்றி.

      Delete
  8. அன்பு பானு மா. ஜெயமோகன் எழுதின நாவலில்
    யானை டாகடர் பிரமாதமாக இருக்கும்.
    இத்தனை அறிவுள்ள ஜீவன் களை
    வாழ விடாமல் துரத்தும் மனிதர்களை என்ன சொல்வது.
    நீங்கள் சொல்லி இருக்கும் பெண்யானையைப் பற்றிய
    தகவல்கள் அருமை..என்ன ஒரு அருமையான சமூகம்.
    நன்றி மா.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வல்லி அக்கா.

      Delete
    2. யானை டாகடர்...அந்த புத்தகம் வைத்து இருக்கிறேன் இன்னும் படிக்கவில்லை மா ...உங்கள் கருத்து படிக்கும் ஆசையை தூண்டிவிட்டது

      Delete
  9. மிகவும் சுவாரஸ்யமான விஷயங்கள்.    ஏற்கெனவே தெரிந்ததுதான் என்றாலும்...     அவரை யானை துரத்தியது திகிலான அனுபவம்.

    ReplyDelete
  10. இதிலுள்ள நிறைய விஷயங்கள் முன்பே அறிந்தவை தான் என்றாலும்

    >>> இறந்து போன யானையின் எலும்புகளை அதன் குடும்பத்தை சேர்ந்த யானை எடுத்து அருகிலிருக்கும் நீர் நிலையில் போட்டு விட்டு, கண்ணீர் விட்டு அஞ்சலி செலுத்துமாம்...<<<

    இது புதிது..

    நல்ல விவரமான பதிவு..

    ReplyDelete
  11. நன்றி துரை சார்.

    ReplyDelete
  12. அருமையான தகவல்கள் மா...

    போன மாதம் யானை நாள் என்னும் நிகழ்ச்சியில் ஒரு fm வழி தான் இந்த தகவல்களை அறிந்துக் கொண்டேன் ...


    இன்னும் அவை பற்றி அறிந்துக் கொள்ள நிறைய உள்ளன .

    ReplyDelete
  13. கரடி இருக்கிறதா என்பதை உறுதி செய்து ஒளிந்துகொள்ள யோசனை தந்தபோது உடன் தந்த எச்சரிக்கை மிகவும் அருமை.

    ReplyDelete
  14. பானுக்கா முதலில் ஸாரி இந்தப் போஸ்டை மிஸ் செய்ததற்கு.

    யானைப்பாடல் என் மகன் வரை சொல்லிவிட்டாகிவிட்டது !!!ஹாஹா

    நல்ல தகவல்கள் பானுக்கா. ஒரு சில நான் அறிந்ததிலிருந்து கொஞ்சம் வித்தியாசமாக இருந்தாலும்.....

    உதவியாளர்????? ம்ம்ம்ம் என்ன சொல்ல...உதவிடலையே!!

    கீதா

    ReplyDelete
  15. யானை குறித்த அருமையான தகவல் .

    //இறந்து போன யானையின் எலும்புகளை அதன் குடும்பத்தை சேர்ந்த யானை எடுத்து அருகிலிருக்கும் நீர் நிலையில் போட்டு விட்டு, கண்ணீர் விட்டு அஞ்சலி செலுத்துமாம்.//

    நம்மில் சாம்பலை கரைப்பது போல் அவைகள் எலும்புகளை நீர் நிலையில் போடுமா?

    //யானை தான் உயிருடன் இருக்கும் பொழுதே தனக்கு பிறகு யார் அந்த இடத்திற்கு வர வேண்டும் என்பதை தீர்மானித்து அந்த குட்டி யானைக்கு இளம் வயதிலேயே அதற்கான பயிற்சிகளை கொடுத்து தயார் செய்து விடுமாம்.//

    இப்படி உள்ள யானைகளை தனிமை படித்தி கோவில்களில் அடித்து விடுகிறோம் என்று வருத்தம் ஏற்படுகிறது.

    ReplyDelete
  16. யானை - பார்க்கப் பார்க்க ஆசை அடங்காத ஒரு உயிரினம். எத்தனை அழகு யானை... சமீபத்திய தமிழகப் பயணத்தில் திருவானைக்கா கோவில் யானையான அகிலா பார்த்து மகிழ்ந்தோம்.

    உயிரினங்களை வைத்து பிழைப்பு நடத்தும் பலர் உண்டு - இங்கே அப்படிப் பார்க்கும்போது பாவமாக இருக்கும் - ஒட்டகம் பற்றி ஜீவி ஐயா குறிப்பிட்டது சரி. மனிதர்கள் உற்சாகமா ஏறிக் கொண்டு உலா வர, பலமுறை உட்கார்ந்து எழுந்து நிற்கும் ஒட்டகங்களைப் பார்த்தாலே பாவமாக இருக்கும். ஒரு முறை உட்கார்ந்து எழுவதே அதற்கு பெரிய வேலை! நாள் முழுவதும் இப்படி உட்கார்ந்து எழுந்தால் என்ன ஆவது.

    ReplyDelete