கணம்தோறும் பிறக்கிறேன் 

Thursday, May 9, 2019

வாசிப்பு அனுபவம் (வேத வித்து)

வாசிப்புஅனுபவம் 
(வேத வித்து)

எதற்காகவோ புத்தக அலமாரியை குடைந்த பொழுது சாவி அவர்களின் படைப்பான 'வேத வித்து' கண்ணில் பட்டது. முன்னர் படித்த ஞாபகம் இல்லை. எனவே படிக்கலாம் என்று எடுத்தேன்.



எப்போது எழுதிய கதை என்று தெரியவில்லை. 1990ல் முதல் பதிப்பு வெளியாகியிருக்கிறது. கவிஞர் வைரமுத்து முன்னுரை எழுதியிருக்கிறார்.

விதவா விவாகம், வேதம் படிக்கும் பிராமண பையனுக்கும், கழை கூத்தாடி பெண்ணுக்கும் இடையே துளிர்க்கும் நட்பு இரண்டையும் டீல் செய்திருக்கும் கதை.

ஆரவாரமில்லாத சரளமான நடை.
'நாதஸ்வரக்காரர் நாயனத்தை வீசி வாசிக்க முடியாதபடி குறுகலான சந்து', "பிரம்மச்சாரிகள் வெற்றிலை போட்டுக்கலாமா மாமா?" " ஏன் கூடாது?பிரம்மச்சாரிகள் கல்யாணமே பண்ணிக் கொள்கிறார்கள்"
என்று ஆங்காங்கே வெளிப்படும் சாவிக்கே உரிய நகைச்சுவை. சுவையான வாசிப்பு அனுபவம்.

அவருடைய விசிறி வாழை படிக்க வேண்டும்.


24 comments:

  1. அந்த டீல் எப்படி முடிகிறது...?

    ReplyDelete
    Replies
    1. நன்றாகவே முடிகிறது. வருகைக்கு நன்றி.

      Delete
  2. அனுபவத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. நன்றிக்கு ஒரு நன்றிஜி!

      Delete
  3. விசிறி வாழை எப்பவோ பற்பல வருடனலுக்கு முன்னால் படித்தது. எங்கள் வீட்டு பைண்டிங் கலெக்ஷனில் இருக்கிறது. இந்தக்கதை நான் படித்ததில்லை.

    ReplyDelete
  4. பாரதிமுதல் தொட்டெடுத்த விதவா விவாஹம்தானா இப்போதெல்லாம்வாசிக்க முடிவதில்லை பொறுமை இருப்பதில்லை

    ReplyDelete
    Replies
    1. அந்தக்காலத்தில் அது பெரிய விஷயம் இல்லையா? வருகைக்கு நன்றி.

      Delete
  5. விசிறி வாழை ,மனதைத் தொட்ட கதை.
    ப்ளாடோனிக் காதல். சாவியின் நகைச்சுவைக்குக் கேட்பானேன்.
    நன்றி பானு மா.

    ReplyDelete
  6. வணக்கம் சகோதரி

    நல்ல பகிர்வு. சாவி அவர்கள் எழுதிய கதைகள் மிகவும் அருமையானவை. நல்லதொரு எழுத்தாளர். விசிறி வாழை பெயர் நினைவு உள்ளது. ஆனால் சரியாக எந்த கதை என நினைவுக்கு வரவில்லை. ஒரு தடவை படிக்க ஆரம்பித்தால், முழுக்கதையும் நினைவுக்கு வந்து விடும். எல்லாமே நினைவடுக்குகளின் இடையில்தான் மாட்டியபடி உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. நான் கேள்விப்பட்டவரை ஐம்பது வயதிற்கு மேலான இருவருக்கிடையே துளிர்க்கும் காதலைப் பற்றியது விசிறி வாழை.
      படிக்க வேண்டும். வருகைக்கு நன்றி.

      Delete
  7. சாவிக்கு இந்த மாதிரி சப்ஜெக்ட்டுகள் புதுசு அல்ல!..

    ReplyDelete
    Replies
    1. சாவியின் எழுத்துக்கள் அதிகம் படித்ததில்லை. வருகைக்கு நன்றி.

      Delete
  8. பானுக்கா சாவியின் வாஷிங்க்டனில் திருமண்ம மட்டுமே வாசித்திருக்கிறேன். மிகவும் பிடித்தது. இப்ப இதையும் வாசிக்க வேண்டும்..நெட்டில் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்..

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாஷிங்டனில் திருமணம் சிறு வயதில் படித்தேன். அதிகம் ரசிக்க முடியவில்லை. அது நாடகமாகக்கூட போடப்பட்டது என்று நினைக்கிறேன். வருகைக்கு நன்றி.

      Delete
    2. //வாஷிங்டனில் திருமணம் சிறு வயதில் படித்தேன். அதிகம் ரசிக்க முடியவில்லை.// நாங்க ஸ்கூலில் அதே பேச்சாக இருந்தோம்/ இப்போவும் மனம் லேசாகணும்னா சாவியின் "வாஷிங்டனில் திருமணம்" அல்லது தேவன் புத்தகங்கள் சாம்புவோ, சுதர்சனமோ, அல்லது மிஸ் ஜானகியோ படிப்பது உண்டு. சுதர்சனம் ஆங்கில நாவல் ஒன்றின் அப்பட்டமான காப்பி என கேஜிஜி(?) எழுதி இருந்த நினைவு. ஆனாலும் நம்ம ஊருக்கு ஏற்ப எழுதப்பட்டிருக்கும்.

      Delete
  9. இனிய காலை வணக்கம் பானுக்கா

    காப்பி பண்ணும் போது இது விட்டுப் போய்டிச்சு

    கீதா

    ReplyDelete
    Replies
    1. அதனால் என்ன? இது ஒரு பெரிய விஷயமா? மீள் வருகைக்கு நன்றி.

      Delete
  10. பக்கத்தில் எங்கேயோ மயில் வந்திருக்கு போல! அகவும் சப்தம் கேட்கிறது.

    ReplyDelete
  11. வேத வித்து கதை/குறுநாவல் படிச்சிருக்கேன். விசிறி வாழை என்னிடம் பிடிஎஃப் ஆக இருக்கிறது. சாவி தன் மகளையும் விதவா விவாகம் செய்து கொடுத்தவர் தானே! பாவம்! இப்போ நினைச்சாலும் மனம் கலக்கம் அடையும் செய்தி அவர் முதல் மாப்பிள்ளை அந்த துபாய் விமான விபத்தில் இறந்தது! :(

    ReplyDelete
  12. இளம் வயதில் தன் கணவனை சாவியின் மகள் எந்த விமான விபத்தில் பறி கொடுத்தாரோ, அதே விமான விபத்தில் தன் மனைவியை இழந்த அர்த்தநாரி என்பருக்கு தன் மகளை மறுமணம் செய்து கொடுத்தார் சாவி. இந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டுதான் வசந்த் 'ரிதம்' என்னும் படத்தை எடுத்ததாக குறிப்பிட்டிருந்தார்.

    ReplyDelete
  13. வருகைக்கு நன்றி அக்கா.

    ReplyDelete
  14. //இளம் வயதில் தன் கணவனை சாவியின் மகள் எந்த விமான விபத்தில் பறி கொடுத்தாரோ, அதே விமான விபத்தில் தன் மனைவியை இழந்த அர்த்தநாரி என்பருக்கு தன் மகளை மறுமணம் செய்து கொடுத்தார் சாவி. //

    அதனால் தான் அப்படி சொன்னேன்.

    ReplyDelete