கணம்தோறும் பிறக்கிறேன் 

Tuesday, February 26, 2019

எல்.கே.ஜி. (விமர்சனம்)

எல்.கே.ஜி. (விமர்சனம்)



நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு அரசியல் நையாண்டி படம். தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் பொழுது எழுந்து நிற்க மறுக்கும் சாமியார் தொடங்கி, வைகையில் தெர்மோகோலை மிதக்கிவிட்ட செல்லூர் ராஜா, சி.எம் மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருக்கும் பொழுது நடக்கும் அவலங்கள், தனியார் பள்ளிகளின் அடர்சிடீஸ், யூ டியூபில் திரைப்படங்களை விமர்சிக்கும் நீலச்சட்டை வரை சமீப கால அரசியல், சமூக விஷயங்களை கலாய்த்திருக்கும் படம். 

அரசியலில் பெரிதாக பணமோ, புகழோ சம்பாதிக்க முடியாத தன்  அப்பா போல், தான் இருந்து விடக் கூடாது, எப்படியாவது தலைவரிடம் நல்ல பெயர் வாங்கி, தேர்தலில் ஜெயித்து, சி.எம். ஆகி விட வேண்டும் என்று நினைக்கும் லால்குடி கருப்பையா காந்தி(LKG)  செய்யும் தகிடுதத்தங்கள்தான் அல்லது அரசியல் சாணக்கியத்தனங்கள்தான்  படம்.  

இதுவரை காமெடியனாக நாம் பார்த்த ஆர்.ஜே.பாலாஜி, கதை,திரைக்கதை,வசனம் எழுதி கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். அவருடைய களமாக இருப்பதால் புகுந்து விளையாடியிருக்கிறார். அவருடைய தந்தையாக நிஜ அரசியல்வாதியான நாஞ்சில் சம்பத். கட்சித் தலைவராக ராம்குமார்(சிவாஜி கணேசனின் மூத்த மகர்). அப்பாவின் சாயலில், அப்பாவின் குரலில் இதுவரை நடித்த படங்களில் ஏற்படுத்தாத பாதிப்பை இதில் ஏற்படுத்தியிருக்கிறார்.  பிரியா ஆனந்த் ஒரு முக்கிய பாத்திரத்தில் வருகிறார், ஆனால் கதாநாயகனுக்கு அவர் ஜோடி கிடையாது. இரண்டாம் பாதியில் படத்தை நகர்த்த பெரிதும் உதவியிருப்பது ஜே.கே. ரித்தீஷ். இவர் தயவால் பின்பாதி நல்ல கலகலப்பு. நாஞ்சில் சம்பத்தை கொல்வதற்காக எதிரிகள் துரத்தி வரும் பொழுது கையில் ஒரு ஆயுதத்துடன் எதிரிகள் முன் பாலாஜி தோன்றும் பொழுது போச்சுடா, பறந்து பறந்து அடிக்கப் போகிறார் என்று நினைக்கிறோம், ஆனால் அந்த மாதிரி விபரீதம் எதுவும் நடக்கவில்லை. 

"உங்களுக்கெல்லாம் கவர்மெண்ட் கொடுக்கிற டீ.வி. வேணும், கிரைண்டர் வேணும், ஆனால் கவர்மெண்ட் ஸ்கூல் வேண்டாம்."
நீங்க கார்ப்பரேட், யார் கொடுத்தாலும் வாங்குவீங்க, எவ்வளவு கொடுத்தாலும் வாங்குவீங்க, எப்போ கொடுத்தாலும் வாங்குவீங்க " என்று வசனங்கள் படு ஷார்ப்.

பாடல்கள் பெரிதாக கவரவில்லை.  ஒரு வேளை கேட்க கேட்க பிடிக்குமோ? படத்தை ரசித்தாலும் கொஞ்சம் வெட்கமும், வேதனையும் வருவதை தவிர்க்க முடியவில்லை.

இயக்குனர் பிரபுவிற்கு இது முதல் படம். இன்னொரு திறமையான இயக்குனர். வெல்கம்! வெல்கம்!



18 comments:

  1. இந்தப் படம் பார்க்கவேண்டிய படம் லிஸ்டுல இருக்கு.

    ReplyDelete
  2. முகமது பின் துக்ளக் படம் போல என்று சொல்லிக்கொண்டிருந்தாராம் பாலாஜி! நானும் பார்க்க வேண்டும். பார்ப்போம் அமேசானில் வரட்டும். அமேசானில் விஸ்வாசம் வந்து விட்டது தெரியுமோ?!!

    ReplyDelete
    Replies
    1. அமேசானில் நான் பார்க்க விரும்பாததற்கு முக்கிய காரணம், பாதியில் தூங்கி விடுவேன்.

      Delete
  3. ரசிக்க முடியும் போல இருக்கே.
    நல்ல விமர்சனம் பானு மா

    ReplyDelete
    Replies
    1. நன்றி வல்லி அக்கா. ரசிக்கக்கூடிய படம்தான்.

      Delete
  4. நல்ல விமரிசனம். இப்படி எல்லாம் படம் வந்திருப்பதை உங்கள் மூலமே தெரிந்து கொள்கிறேன். விமரிசனம் பார்த்தால் படம் ரசிக்கலாம் எனத் தோன்றுகிறது. அது சரி, யார் இந்த ஆர்.ஜே. பாலாஜி? ஜிவாஜி பிள்ளை பிரபு தான் நடிச்சார். ராம்குமாரும் நடிச்சிருக்காரா? இது முற்றிலும் புதிய செய்தி. பிரபு ஜிவாஜி பிள்ளை பிரபுவா? அல்லது பிரபுனு ஒரு இயக்குநர் இருக்காரா? ஹிஹி, கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டாப்போல் சில ஜினிமாச் செய்திகள் இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. ஆஹாங்..! ஒரு திரை விமர்சனத்தை படித்து விட்டு இத்தனை கேள்விகளா?
      ஆர்.ஜே.பாலாஜி என்பவர் ரேடியோ ஜாக்கியாக இருந்தார். சில படங்களில் காமெடியனாகவும் நடித்திருக்கிறார்.
      சிவாஜியின் மூத்த மகன் முன்பு ஒரு படத்தில் நடித்தார். சமீபத்தில் 'ஐ'படத்தில் வில்லன்களில் ஒருவராக வந்தார்.
      இயக்குனர் பிரபு சிவாஜியின் மகன் அல்ல.

      Delete
  5. படம் எப்படியாக இருந்தாலும் தங்களது விமர்சனம் நறுக்காக இருக்கிறது..

    ReplyDelete
  6. அக்கா நல்ல விமர்சனம்...ஸோ பார்க்கலாம்னு தெரியுது...பார்க்கணும் என் லிஸ்டில் உண்டு ஆனா எப்ப வாய்ப்பு கிடைக்குமோ...மச்சினர் கண்டிப்பா இந்தப் படத்தை எப்படியாவது காப்பி பண்ணி வைச்சுருவார்...சென்னைக்குப் போகும் போது பார்த்துடலாம்...

    கீதா

    ReplyDelete
  7. பார்க்க வேண்டும்...

    விமர்சனம் அருமை...

    ReplyDelete
  8. விமர்சனம் நன்றாக இருக்கிறது. பார்க்கமுடியுமா என்று தெரியவில்லை. பாலக்காடு செல்லும் வாய்ப்பு இப்போது இல்லை. இருந்தாலும் அங்கு இது போன்ற படங்கள் வராது பொதுவாக...

    பார்ப்போம் எப்படி என்று..

    துளசிதரன்

    ReplyDelete
  9. நன்றி தளசிதரன். இருக்கவே இருக்கிறது அமேசான் ப்ரைம் அல்லது தொலைக்காட்சி

    ReplyDelete
  10. விமரிசனம் என்பதை விட அலசி தொவச்சு .....
    பல கோணங்களிலும் ........
    விவரமாக உள்ளது

    ReplyDelete