கணம்தோறும் பிறக்கிறேன் 

Wednesday, September 21, 2016

ஐ.ஆர்.சி.டி.சி. குழப்பங்கள்.

ஐ.ஆர்.சி.டி.சி. குழப்பங்கள்.

சமீபத்தில் கேரளாவில் வசிக்கும் என் நாத்தனாரின் கணவர் திடீரென்று காலமாகிவிட, நாங்கள் கேரளா செல்ல வேண்டிய நிர்பந்தம். ஓணம் சமயமாதலால் எந்த ரயிலிலும் டிக்கெட் கிடைக்கவில்லை. எனவே கோயம்புத்தூர் வரை  சதாப்தியில் சென்று, அங்கிருந்து இரண்டு பேருந்துகள் மாறி பெரும்பாவூர் சென்றோம். திரும்பி வரும்பொழுது தன்பாத் எக்ஸ்பிரஸில் செகண்ட் ஏ.சி.யில் டிக்கெட் கிடைத்தது. பயண நேரம் கொஞ்சம் அதிகம்தான் என்றாலும், உட்கார்ந்து கொண்டே வரவேண்டாம், படுத்துக்க கொள்ள முடியும் என்பதால் என் கணவர் அந்த ரயிலில் புக் பண்ணினார். 

திருச்சூரில் அந்த ரயில் வந்து கொண்டிருக்கிறது என்னும் அறிவிப்பு செய்த பொழுது திருவனந்தபுரத்திலிருந்து கோயம்புத்தூர், சென்னை வழியாக என்று அறிவிக்கவில்லை. இது முதல் குழப்பம். அந்த ரயிலில் திருவனந்தபுரம் டு டாட்டா நகர் என்றிருந்தது. தன்பாத் என்னும் பெயரே இல்லை. நாம் ஏற வேண்டிய ரயில் இதுதானா என்று குழப்பம், உடன் ஏறியவர்களிடம் இது தன்பாத் எக்ஸ்பிரெஸ்தானே என்று கேட்டுக் கொண்டு ஏறினோம். 
தன்பாத் எக்ஸ்பிரஸ் என்னும் பெயரை டாட்டா நகர் எக்ஸ்பிரஸ் என்று பெயர் மாற்றி கொஞ்ச நாள் ஆகி விட்டதாம். ஆனால், irctc வெப் சைட்டில் தன்பாத் என்றுதான் இருக்கிறது.

கோவையில் திருவள்ளூர் செல்ல வேண்டிய ஒரு குடும்பத்தினர் ஏறினார்கள். சேலம் வந்ததும் அந்த குடும்பத்த தலைவர் டி.டி.ஈ யிடம் இந்த வண்டி சென்னை செல்லுமா என்று கேட்டார். அதற்கு, டி.டி.ஈ., "இல்லை போகாது, சென்னை செல்பவர்கள் எல்லோரும் பெரம்பூரில் இறங்கி லோக்கல் ட்ரெயின் யில் செல்ல வேண்டும்" என்றார். நல்ல வேளை இப்போதாவது தெரிந்ததே என்று நினைத்துக் கொண்டோம்.  ஆன் லைனில் புக் செய்தவர்களுக்கு மெசேஜ் வந்திருக்கும் என்றார். (அதை யார் பார்க்கிறார்கள்?). அவர் சொன்ன பிறகுதான் மெசேஜ் செக் செய்தார் என் கணவர். வந்திருந்தது. டி.டி.ஈ. நம் டிக்கெட்டை செக் பண்ணும் பொழுது இந்த தகவலை தெரிவித்திருக்கலாமே..!

நாங்கள் பெரம்பூரில் இறங்கும் பொழுது ஒரு பெண்மணி இது எந்த ஸ்டேஷன்? என்று கேட்டார். பெரம்பூர் என்று கூறி விட்டு, என் கணவரின் ஆலோசனைப்படி அவர் எங்கு செல்கிறார் என்று கேட்க, அந்த பெண்மணி,"சென்னை, சென்னை சென்ட்ரல்.." என்றார். "சென்னை சென்ட்ரலுக்குச் செல்லாது, இங்கேயே இறங்கி விடுங்கள்." என்றதும், அட கடவுளே, இது எனக்குத் தெரியாது, ரொம்ப தாங்ஸ்ங்க" என்றபடி இறங்க ஆயத்தமானார். வேறு யாராவது தெரியாமல் விஜயவாடா போயிருப்பார்களோ என்று கவலையாக இருந்தது.

கீழே இறங்கினால் திருவனந்தபுரத்திலிருந்து டாடா நகர் செல்லும் தன்பாத் எக்ஸ்பிரஸ் சென்னை சென்ட்ரல் செல்லாது. சென்ட்ரலில் இறங்க வேண்டிய பயணிகள் இங்கே இறங்கவும் என்று ஒலி பெருக்கியில் அறிவித்துக் கொண்டிருந்தனர். ஆனால் அந்த அறிவிப்பு ஏ.சி. கோச்சில் கேட்காது.

 இரவு நேரத்தில் ஏ.சி. கோச்சில் பயணிக்கும் பொழுது எந்த ஸ்டேஷன் வந்திருக்கிறது என்பது அங்கிருக்கும் ஜன்னல் கண்ணாடி வழியே தெளிவாகத் தெரியாது. சென்னையிலிருந்து திருச்சிக்கு பல்லவன் எக்ஸ்பிரஸில் செல்லும் பொழுது, இப்படி எந்த ஸ்டேஷன் என்று தெரியாமல் அவஸ்தை படுவோம். டெக்னாலஜி எத்தனையோ வளர்ந்திருக்கிறது எந்த ஸ்டேஷன் வந்திருக்கிறது என்பதை டிஜிட்டல் டிஸ்பிலே செய்ய ஏற்பாடு செய்யலாம், அல்லது, அறிவிக்கலாம். 
 

13 comments:

  1. ஒவ்வொரு பெட்டியிலும் ஒரு அறிவிப்பு ஒட்டிக் கூட வைக்கலாம். தெரியாதவர்கள் என்ன செய்வார்கள்? எங்கு போய் இறங்குவார்கள்? கஷ்டம்தான்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி ஸ்ரீராம்!

      Delete
  2. நீங்க சொல்வது சரியே. அப்படித் தான் ராக்ஃபோர்ட்டில் இறங்க வேண்டிய ஸ்டேஷன் வந்தது தெரியாமல் அப்புறமாத் தெரிஞ்சு நாங்க இறங்கினோம். :) நல்லவேளையா ரயில் நகர ஆரம்பிக்கலை.

    ReplyDelete
  3. ஆனால் சில குறிப்பிட்ட முக்கிய ரயில்களில் நீங்கள் சொல்லும் வசதி உண்டு. பெட்டிகளில் டிஜிடல் அறிவிப்பு ஓடிக் கொண்டிருக்கும். மேலும் பாரத் தர்ஷன் திட்டத்தின் மூலம் நாங்க ட்ராவல் டைம்ஸில் சுற்றுலா சென்ற போது எல்லாப் பெட்டிகளிலும் இந்த அறிவிப்பைப் பார்க்க முடிந்தது. :)

    ReplyDelete
  4. இப்போதெல்லாம் ஒரு குறிப்பிட்ட எண்ணைக் கொடுத்திருக்கிறார்கள். அந்த எண்ணுக்கு உங்கள் பிஎன் ஆர் எண்ணைப் பதிவு செய்து நீங்கள் இறங்க வேண்டிய ஸ்டேஷனைக் குறித்தும் பதிந்தால் உங்களுக்கு இறங்க வேண்டிய ஸ்டேஷனில் உங்கள் அலைபேசி மூலம் தகவல் தெரிவிப்பார்கள்.

    ReplyDelete
  5. மற்றக்குறைபாடுகளுக்கு நீங்கள் ரயிலில் பயணம் செய்யும்போதே உங்களிடம் ட்விட்டர் வசதி இருந்தால் ரயில்வே துறை மந்திரி சுரேஷ் பிரபுவுக்கு செய்தி அனுப்பலாம். உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அல்லது பயணச்சீட்டிலேயே மேலே பிஎன் ஆர் எண்ணுக்குப் பக்கத்தில் காடரிங் புகார் எண் பொதுப் புகார் எண் என்று கொடுத்திருப்பார்கள். ஏதேனும் ஒரு புகார் எண்ணுக்குத் தொலைபேசித் தெரிவிக்கலாம். நாங்க டிசம்பரில் கல்கத்தாவில் இருந்து திரும்பி வருகையில் காடரிங் பற்றிய புகாரைக் கொடுத்தோம். உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது சொந்த அனுபவம்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் உபயோகமான பல தகவல்களுக்கும் நன்றி!

      Delete
  6. உங்கள் பதிவு அனைவருக்கும் சென்றடைய வேண்டுமானால் ஶ்ரீராமைக் கேட்டுக் கொண்டு தமிழ் மணத்தில் இணையுங்கள். நான் 2009 ஆம் ஆண்டு வரையில் தமிழ் மணத்தில் இணைந்திருந்தேன். பின்னர் விலகி விட்டேன். இப்போதைய நடைமுறைகள் தெரியாததால் ஶ்ரீராமைக் கேட்கச் சொன்னேன். :)

    ReplyDelete
  7. தமிழ் மனதில் ரெஜிஸ்டர் செய்தேன். ஒரு எண் அனுப்பினார்கள். ஆனால், அதை பயன் படுத்தி என் வலைப்பூவை எப்படி இணைப்பது என்று தெரியவில்லை. It is not as user friendly as Indiblogger.

    ReplyDelete
  8. நீங்கள் சொல்வதை எல்லாம் பார்த்தால் பயணம் செய்வதே
    பயங்கரமாக இருக்கும் என்று தோன்றுகிறது. கீதா சொல்லி இருப்பது எல்லாம் நமக்கு அனுபவப்
    பாடம். மிகவும் பலனுள்ளது. பதிவுக்கு மிக நன்றி பானுமதி.

    ReplyDelete
  9. வாங்க வல்லிமா! வருகைக்கு மகிழ்ச்சி

    ReplyDelete
  10. இப்படி சில தொல்லைகள் உண்டு..... இன்னும் நிறைய மாற்றங்கள் வர வேண்டும்....

    ReplyDelete
  11. வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி வெங்கட்! ரயில் பயண அசௌகரியங்கள் குறித்து உங்களுக்கு நிறைய அனுபவங்கள் இருக்கலாம்!

    ReplyDelete