கணம்தோறும் பிறக்கிறேன் 

Sunday, July 17, 2016

கம்பனின் ஏக்கம்! எனக்கும்தான்..!

கம்பனின் ஏக்கம்! எனக்கும்தான்..!

கவிச் சக்ரவர்த்தி கம்பர் சோழ அரசன் குலோத்துங்கனின் அவையை அலங்கரித்தவர் மட்டுமல்ல,அவனுடைய சிறந்த நண்பரும் கூட. ஆனால் ஒரு முறை சோழ அரசனோடு ஏற்பட்ட ஏதோ மன வருத்தத்தத்தில் சோழ தேசத்தை விட்டு நீங்கி சேர தேசத்தை அடைகிறார். சேர தேச அரசன் அவருக்கு மிகுந்த மரியாதை அளித்து அங்கு பராமரித்தாலும் கொஞ்ச நாட்களிலேயே கம்பருக்கு குலோத்துங்கன் மீது கொண்ட பகை உணர்ச்சி நீங்கி விடுகிறது. சோழ அரசனையும் தேசத்தையும் காண வேண்டும் என்ற ஏக்கம் எழுகிறது. அப்போது மருத நிலத்தை (அதாவது வயலும் வயல் சார்ந்த இடமும்) புகழ்ந்து அவர் பாடிய பாடல்தான் 

தண்டலை மயில்கள் ஆடத்
தாமரை விளக்கம் தாங்கக் 
கொண்டல்கள் முழவின் ஏங்கக் 
குவளைகண் விழித்து நோக்கத் 
தெண்திரை எழினி காட்டத் 
தேம்பிழி மகர யாழின் 
வண்டுகள் இனிது பாட 
மருதம்வீற் றிருக்கும் மாதோ 


என்னும் அழகிய பாடல் 
 
கம்பனை போலவே எனக்கும் சேர நாட்டிற்கு செல்லும் பொழுதெல்லாம், அந்த சற்றே அலுப்பூட்டும் பசுமையைக் காணும் பொழுதெல்லாம் எங்கள் சோழ நாட்டின் அழகு நினைவுக்கு வரும். ஆனால் என் மகள் இதை ஒப்புக் கொள்ள மாட்டாள். என்ன இருந்தாலும் அவள் சேர தேசத்து(பாலக்காடு) பெண் அல்லவா?   இதை படிப்பபவர்கள் எத்தனை பேர் ஒப்புக் கொள்வார்கள் என்று தெரியாது. தஞ்சை மாவட்டத்தில் எங்கே நிலம் இருக்கிறது? எல்லாவற்றையும் பிளாட் போட்டுக் கொண்டிருக்கிறார்களே என்று கேட்கலாம்.  

அது கிடக்கட்டும், கம்பனுக்கும் குலோத்துங்கனுக்கும் இடையே ஏற்பட்ட ஊடலைப் பற்றி அறிந்து கொள்ள விருப்பம் இருப்பவர்கள் கூறுங்கள், சொல்கிறேன்.

12 comments:

  1. நீங்கள் தமிழ் டீச்சரா! சொல்லுங்களேன், கேட்போம் (படிப்போம்) அது இருக்கட்டும் நானும் சோழ தேசம்தான். தஞ்சாவூர்.

    ReplyDelete
    Replies
    1. நான் டீச்சர் இல்லை. நல்ல தமிழ் ஆசிரியர்களிடம் தமிழ் படித்தவள். வருகைக்கு நன்றி!
      நான் டீச்சர் இல்லை. நல்ல தமிழ் ஆசிரியர்களிடம் தமிழ் படித்தவள். வருகைக்கு நன்றி!
      நான் டீச்சர் இல்லை. நல்ல தமிழ் ஆசிரியர்களிடம் தமிழ் படித்தவள். வருகைக்கு நன்றி!








      Delete
    2. ஸாரி.... கோபித்துக் கொள்ள வேண்டாம்... எதற்கு மூன்று தரம் சொல்லியிருக்கிறீர்கள்?!!

      Delete
    3. ஸாரி.... கோபித்துக் கொள்ள வேண்டாம்... எதற்கு மூன்று தரம் சொல்லியிருக்கிறீர்கள்?!!

      Delete
  2. தஞ்சை மட்டுமா எல்லா ஊர்களும் அப்படித்தான்
    அறிந்து கொள்ள ஆவலுடன் தொடர்கிறேன்
    இப்பொழுதாவது ஃபாலோவர் வைத்தீர்களே இனி பதிவுக்கு உடனுக்குடன் வரமுடியும்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி! உங்களைப் போன்றவர்களின் எதிர்பார்ப்புகொஞ்சம் பயப்படுத்துகிறது, ஆவலை பூர்த்தி செய்ய வேண்டுமே!

      Delete
    2. வருகைக்கு நன்றி! உங்களைப் போன்றவர்களின் எதிர்பார்ப்புகொஞ்சம் பயப்படுத்துகிறது, ஆவலை பூர்த்தி செய்ய வேண்டுமே!

      Delete
  3. எல்லாம் இரண்டு இரண்டு தரம் வந்திருக்கு! நீங்க வலைப்பதிவுக்குச் சொந்தக்காரர் என்பதால் உங்களோட கருத்து மூணு தரம் வந்திருக்கு! ஹிஹிஹி! ஜாலியா இருக்கு இம்மாதிரித் தொ.நு.கோ.க்களைப் பார்க்கையில்!

    ReplyDelete
  4. நான் பாண்டியநாட்டுக்காரி! :)

    ReplyDelete
  5. மருத நிலப்பரப்பை விவரிக்கும் அருமையான பாடல். நீர்ப்பரப்பின் ஓரத்தில் சேர்ந்திருக்கும் தண்டலைகள் தஞ்சையில் இன்றும் உண்டோ? இல்லை என்றே தோன்றுகிறது. வருங்காலத்தில் இதுபோன்ற சங்கப் பாடல்களை வாசித்துக் கற்பனை செய்து கொள்ளலாம், நேரில் காண முடியாது.

    மேலே குறிப்பிட்ட ஊடலைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி! கொஞ்சம் ஊர் சுற்றிக்கொண்டு இருக்கிறேன். சென்னை திரும்பியதும் கம்பன் சோழன் ஊடல் பற்றி பேசலாம்.

      Delete
    2. வருகைக்கு நன்றி! கொஞ்சம் ஊர் சுற்றிக்கொண்டு இருக்கிறேன். சென்னை திரும்பியதும் கம்பன் சோழன் ஊடல் பற்றி பேசலாம்.

      Delete